Onமீcome…

கடவுளைப் பார்க்க ஆசை
கண்களை மூட மனமில்லை
சொர்க்கம் போக விருப்பம்
செத்துப் போக வருத்தம்

தொட்டுப் பார்க்கத்
துடிக்கும் மனது
நீட்டிவிட மறுக்கும்
கைகள்.

சாமி பேசும் சத்தம் கேட்க
சரியான ஆவல்
சுத்தியிருக்கும்
சத்தம் நிறுத்த
சுத்தமாய் முடியவில்லை

பிச்சை

பலரிடம்
ஏந்தி
எதிர்பார்த்ததில்
சிலதைப்
பெற்று
‘சாமி
நல்லாயிருங்க’
சொல்லி….
சாமிகளை
நம்பி
திரும்பத்
திரும்பப்
போய்
சில
சாமிகள்
என்னைப்
போல்
திருவோடு
ஏந்துவதைக்
கண்டு…
இன்னும்
சில
சாமிகள்
துரத்தியதால்
மிரண்டு…
இனி போக
யாருமின்றி
சாமிகளுக்கெல்லாம்
சாமியே
உன்னிடம்
வந்துவிட்டேன்
சரணாகதியே…

திருவோட்டால்
தான்
பிரச்சனையோ
வீசிவிட்டேன்
அதையும்…
வெறுங்கையை
ஏந்துகிறேன்.
எதைப்
போட்டாலும்
ஏற்கிறேன்.
என்
விருப்பம்

என்
தேவையை
விட
பிறர்
தேவை
உன்
விருப்பம்
உன்
தர்மம்
வாழ்க
தர்மம்
வாழ்க
தர்ம
தேவன்.